திறனறிவு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

தென்காசி, ஏப். 26:  தென்காசியில் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவு தேர்வில் 2019-20ம் கல்வியாண்டில் வெற்றி பெற்ற பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. தென்காசி நகராட்சி 1வது வார்டு துவக்கப்பள்ளியில் நடந்த விழாவிற்கு மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) சீனிவாசன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர்கள் பரமேஸ்வரன், சந்திரசேகரன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மயிலேறும்பெருமாள், திருவள்ளுவர் கழக செயலாளர் சிவராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் வரவேற்றார். செங்கோட்டை வட்டார கல்வி அலுவலர் மேரிகிரேஸ் ஜெபராணி, துணை வேளாண்மை அலுவலர் சேக்முகைதீன், அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், நூலகர்கள் ராமசாமி, பிரமநாயகம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

தென்காசி வட்டார அளவில் மொத்தம் 25 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த மாணவர்களுக்கு மாதந்தோறும ஆயிரம் ரூபாய் வீதம் ஊக்கத்தொகை நான்கு ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. விசுவநாதபுரம் எம்.எம்.நடுநிலைப்பள்ளி மாணவிகள் மலர்பிரியா, கலைச்செல்வி, வர்ஷினி, அகமதுபைசல், ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யா, அருணாசலம் மோஸ்வெஸ்லீ, அர்ச்சனா, பிரசன்னா, மகலெட்சுமி, பூஜா, காசிமேஜர்புரம் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர் இசக்கிபாரத், 9வது வார்டு நகராட்சி பள்ளி அப்துல்ஷாபிக், முகம்மதுபக்கீர், ஆலிம்கலிதா, 7வது வார்டு பள்ளி பாத்திமாரினோஷா, ஹமீதியா நடுநிலைப்பள்ளி அதீபா, திருச்சிற்றம்பலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பிரியதர்ஷினி, காக்கையனூர் டிடிடிஏ நடுநிலைப்பள்ளி ராம்சதா, காட்டுபாவா உயர்நிலைப்பள்ளி பெனாசிர், நாகூரப்பாகபீர், முகம்மது மைதீன், ஆயிஷாசித்திகா, அஸ்மா, அப்துல்ரகுமான் உள்ளிட்ட 25 மாணவர்கள் மற்றும் பயிற்சியளித்த ஆசிரியர்கள், பயிற்சிக்கு உதவிய முத்துநாயகம் அறக்கட்டளை, நூலக பணியாளர் முருகேசன் ஆகியோர் பாராட்டப்பட்டனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் முத்துக்கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Related Stories: