களக்காடு சிவன் கோயிலில் மண்டகப்படிதாரர் கூட்டம்

களக்காடு, ஏப். 26:  களக்காடு கோயிலில் மண்டகப்படிதாரர்கள் கூட்டம் நடந்தது. களக்காடு சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் திருக்கோயில் வைகாசி திருவிழா, வரும் மே 9ம் தேதி தொடங்குகிறது. 17ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதனை முன்னிட்டு திருவிழா மண்டகப்படிதாரர்கள் கூட்டம் கோயிலில் நடந்தது. இந்து அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி முருகன் தலைமை வகித்தார். இதில் 1ம் திருநாள் முதல் 10ம் திருநாள் வரையிலான திருவிழா மண்டகப்படிதாரர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து ரதவீதிகளில் சப்பரங்கள் உலா வருவதற்கு ஏதுவாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். திருவிழாவை வெகுவிமரிசையாக நடத்துவது, அதற்கு கோயில் ஊழியர்கள், மண்டகப்படிதாரர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கோயில் ஊழியர் சிவா நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: