நெல்லையில் நாளை விடுதி கண்காணிப்பாளர் பணி தேர்வு

நெல்லை, ஏப். 26:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், நாளை (27ம் தேதி)  சனிக்கிழமை முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இருவேளைகளிலும் விடுதி கண்காணிப்பாளர் பதவிக்கான போட்டித் தேர்வு நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் பாளை. பொதிகை நகர் ஜோஸ் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடக்கிறது. இந்தத் தேர்வை 126 பேர் எழுத உள்ளனர். தேர்வை கண்காணிக்க தாசில்தார் நிலையில் ஒரு சுற்றுக்குழு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்வு மையத்தில் தேர்வினை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யவும், கண்காணித்திடவும் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

Advertising
Advertising

தேர்வு நாளன்று தடைபடாத மின்சாரம் வழங்கவும், பேருந்துகளை தேர்வு மையத்திற்கு சீராக இயக்கக் கேட்டும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் கல்வி நிலையத்திற்கு காவல் துறை மூலம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடக்கும் மையத்தின் அருகில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவோர் தங்களின் தேர்வு மையத்தினை கண்டறிந்து முன்கூட்டியே தேர்வு எழுத வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.  மேலும், தேர்வு அறையினுள் செல்போன்களை எடுத்துச் செல்லக்கூடாது. தேர்வு எழுதுபவர்கள் தவிர இதர நபர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படாது என நெல்லை கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.

Related Stories: