தென்காசி ஷீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜைகள்

தென்காசி, ஏப். 26:  தென்காசி ஷீரடி வைத்திய சாய்பாபா கோயிலில் நேற்று சித்திரை மாத முதல் வியாழக்கிழமையை முன்னிட்டு 11 வகையான பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தென்காசி ரயில் நிலையம் எதிரில் மங்கம்மா சாலையில் அமைந்துள்ள ஷீரடி வைத்திய சாய் பாபா கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் வியாழன் அன்று பழங்களால் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். இந்தாண்டு நேற்று முதல் வியாழக்கிழமையை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், பாபாவிற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து அன்னாச்சிபழம், வாழைப்பழம், ஆரஞ்சு, கமலா ஆரஞ்சு, செவ்வாழை, மாம்பழம், கொய்யாப்பழம், எலுமிச்சைபழம், தர்பூசணி, ஆப்பிள், மாதுளை உள்ளிட்ட 11 வகையான பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு காலை ஆரத்தி நடந்தது. தொடர்ந்து மதியம், மாலை மற்றும் இரவு ஆரத்திகள் நடந்தது.  இதில் தென்காசி, மேலகரம், செங்கோட்டை, வடகரை, குத்துக்கல்வலசை, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் டாக்டர் அறிவழகன், டாக்டர் சியாமளா, அலுவலக உதவியாளர்கள் சங்கர், சுடலை, செல்வம் மற்றும் சாய் பக்தர்கள் செய்திருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: