தென்காசியில் அரபி பாடசாலை ஆண்டு விழா

தென்காசி, ஏப். 26:  தென்காசியில் புதுமனை நண்பர்கள் சார்பில் ஜாமிஆ அஸ்ஹாபுஸ் ஸூப்பா அரபி பாடசாலையின் 5ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் மாணவ, மாணவிகளின் மார்க்க சொற்பொழிவு விழா நடந்தது. விழாவிற்கு தலைவர் அகமதுமீரான் தலைமை வகித்தார். எஸ்டிபிஐ கட்சியின் நகர தலைவர் செய்யது மஹ்மூத் வரவேற்றார். ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் ஷேக்அசரத், பீர்ஸா, ஜலால் முன்னிலை வகித்தனர். திவான், ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பில் பேசினார். சிறப்பு விருந்தினர்களாக ஐந்து வர்ணம் பள்ளிவாசல் தலைவர் வக்கீல் சலீம், மஸ்ஜிதே முபாரக் பள்ளிவாசல் செயலாளர் ஜலால், கமிட்டி உறுப்பினர்கள் நைனாமுகம்மது, முகம்மது காசிம் ஆகியோர் பங்கேற்று 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினர். ஜலால் நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: