சொக்கம்பட்டி அருகே வாகன உதிரிபாகம் திருடிய 2 பேர் கைது

புளியங்குடி, ஏப். 26:  சொக்கம்பட்டி அருகே வேலைக்காக நிறுத்தியிருந்த வாகனத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான உதிரிபாகங்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். சேர்ந்தமரம் அருகே உள்ள வீரசிகாமணியை சேர்ந்தவர் வேல்முருகன் (35). இவருக்கு சொந்தமான ஹிட்டாச்சி வாகனம் வேலை நிமித்தமாக சொக்கம்பட்டி அருகே உள்ள சிங்கிலிபட்டி கிராமத்திற்கு சில நாட்களுக்கு முன் கொண்டு வரப்பட்டது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான உதிரிபாகங்கள் திருடு போனது. இதுகுறித்து வேல்முருகன் சொக்கம்பட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். இதில் சிங்கிலிப்பட்டி அருகே உள்ள சிதம்பரபேரி இந்திரா காலனியை சேர்ந்த துரைசாமி மகன் கார்த்திக் (27), பழனிசாமி மகன் மதிவாணன் (40) ஆகியோர் வாகனத்தில் உதிரிபாகங்கள் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து வாகன உதிரிபாகங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரும் தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertising
Advertising

Related Stories: