பைக் மோதி முதியவர் பலி

செங்கோட்டை, ஏப். 26: செங்கோட்டையில் பைக் மோதி காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். செங்கோட்டை கலங்கரை வேளாளர் தெருவைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் (55). கடந்த 17ம் தேதி செங்கோட்டை மண்பாண்ட தொழிலாளர் சங்கம் அருகே சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த பைக் மோதியதில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து பிரானூர் பார்டரை சேர்ந்த செல்வம் மகன் அரவிந்த் (22) என்பவரிடம் செங்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: