விஏஓ-விவசாயி மோதல்

சிவகிரி, ஏப். 26:  தென்மலை அடுத்த கீழக்கரிசல்குளத்தை சேர்ந்தவர் செண்பகராஜ் (35). கடந்த 22ம் தேதி இப்பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையில் செண்பகராஜ் நிலத்தில் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்து விட்டதாக தெரிகிறது. இதற்கான இழப்பீடு நிவாரணத்திற்கான சான்று அளிக்கும்படி அவர், துரைச்சாமியாபுரத்தில் உள்ள தென்மலை பாகம்2 கிராம நிர்வாக அலுவலர் முனியசாமியிடம் (46) நேற்று கேட்டுள்ளார்.  அதற்கு விஏஓ முனியசாமி, நேற்று முன்தினம் அப்பகுதியில் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்ததில் உங்கள் வாழை தோட்டத்தில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது தெரிந்தது. எனவே உங்களுக்கு இழப்பீட்டு நிவாரணச் சான்று அளிக்க இயலாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செண்பகராஜ், விஏஓ முனியசாமியை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதில் கழுத்து பகுதியில் விஏஓவுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இச்சம்பவம் குறித்து விஏஓ முனியசாமி கொடுத்த புகாரின் பேரில் செண்பகராஜ் மீதும், செண்பகராஜ் அளித்த புகாரையடுத்து விஏஓ மீதும் சிவகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: