காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக பி.டெக் படிப்பு நுழைவுத்தேர்வு : இந்தியாவில் 46 நகரங்களில் நாளை நடக்கிறது

சென்னை: கோவை, காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் அனைத்து பி.டெக், எம்.டெக், எம்.பி.ஏ படிப்புகள் மற்றும் பி.டெக் & வேளாண் பொறியியல் ஆகிய படிப்புகளுக்கு இந்த கல்வி ஆண்டில் சேர இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு, விஜயவாடா, கொச்சி, கவுகாத்தி, ஹைதராபாத், ஆனந்தபூர், கொல்கத்தா, ராஞ்சி, பாட்னா, கொச்சி, திருவனந்தபுரம் போன்ற முக்கிய நகரங்களிலும் மற்றும் தமிழகத்தில் கோவை, சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், நாகர்கோவில், தூத்துக்குடி, திருநெல்வெலி, மற்றும் முக்கிய நகரங்களிலும் நாளை 27ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.

நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் அருகில் உள்ள தேர்வு மையங்களுக்கு இன்று (26.04.2019) காலை 11.00 மணிக்கு மேல் சென்று பதிவு செய்ததால் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மேலும் விபரங்களுக்கு பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை அலுவலகத்தை 1800 425 4300 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 0422 2363636 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.மேலும் www. karunya.edu என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

Related Stories: