×

பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் பிரமோற்சவ தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்


பெரணமல்லூர், ஏப்.26: பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோயில் பிரமோற்சவத்தையொட்டி நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் சித்திரை மாத பிரமோற்சவம் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, சுவாமிக்கு நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு நேரங்களில் உற்சவ மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து கடந்த 23ம் தேதி சுவாமி திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடந்தது.

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 8 மணியளவில் உற்சவ மூர்த்திகள் தேவி, பூதேவி சமேத லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின்னர், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து தேரில் அமர வைத்து பூஜைகள் நடத்தப்பட்டது. காலை 9 மணியளவில், மங்கள மேளதாளத்துடன், பக்தர்களின் `கோவிந்தா, கோவிந்தா'''' கோஷம் முழங்க திருத்தேர் புறப்பட்டது. அப்போது, திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர், சிம்ம மலையை சுற்றி வந்த திருத்தேர் மாடவீதி வழியாக உலாவந்து நிலையை அடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : Peranamallur Laxmi Narasimha Temple ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...