மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் ஊடுபயிர்கள்

ஈரோடு, ஏப். 26: ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் குணசேகரன்  கூறியிருப்பதாவது: உலக அளவில் கோதுமை மற்றும் நெற்பயிருக்கு அடுத்தபடியாக, மக்காச்சோளம் முக்கிய உணவு பயிராக உள்ளது. இதில், ஏற்படும் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த, கோடை உழவு செய்யவும், விதை நேர்த்தி செய்து விதைப்பதும் அவசியமாகிறது.அனைத்து பகுதிகளிலும், பரவலாக கோடை உழவு செய்யப்பட்டு வருகிறது. மக்காச்சோளத்தில் ஏற்படும் படைப்புழு வளர்ச்சி மற்ம் தாக்குதலை கட்டுப்படுத்த, தடுப்பு பயிர்கள், நச்சு கவர்ச்சி பயிர்களை வரப்பு பயிராகவும், ஊடுபயிராகவும் சாகுபடி செய்து பயன்பெறலாம். வயலை சுற்றி தட்டை, உளுந்து போன்ற பயறு வகை பயிர்களை வரப்பு பயிராகவும், ஊடுபயிராகவும், சூரியகாந்தி ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்து பயிர்களை வரப்பு பயிராகவும், ஊடுபயிராகவும், கிளாசிடியா அல்லது சாமந்தி போன்ற ஆண்டு முழுவதும் பூக்கும் தாவரங்களை தடுப்பு பயிராகவும், வரப்பு பயிராகவும் விதைக்கலாம்.

கம்பு, நேப்பியா பயிர்கள் வரப்பு பயிராக நடுவதால், தாய் பூச்சிகள் புல் வகை செடிகளில் முட்டையிடும். இவற்றில் சத்து குறைவாக உள்ளதால், புழுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம். மக்காசோளத்துடன், படைப்புழுக்கள் அதிகம் தாக்காத பயிர்களான மரவள்ளி, பீன்ஸ் போன்றவற்றை ஊடுபயிராக அல்லது பீன்ஸ் போன்றவற்றை ஊடுபயிராக பயிர் செய்தால், புழுக்கள் வராது. வேலிமசாலை ஊடுபயிராக பயிரிடுவதால், வேலி மசாலில் இருந்து வெளிவரும் வாசனை திரவியங்கள், படைப்புழுவுக்கு உகந்தது அல்ல. இதனால், சேதம் குறையும். பூக்கும் தாவரங்களான கொத்தமல்லி, சாமந்தி, சூரியகாந்தி போன்ற பயிர்கள் நன்மை செய்யும் பூச்சிகளை அதிகம் கவர்வதால், இவை இப்பூச்சிகளால் படைப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

Related Stories: