சத்தியமங்கலம் அருகே ரூ.17 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி

சத்தியமங்கலம், ஏப்.26:சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 இடங்களில் உள்ள பள்ளங்களின் குறுக்கே ரூ.17 கோடியில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. திண்டுக்கல்-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை தமிழகம்-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது. இச்சாலை வழியாக இருமாநிலங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, சரக்கு லாரி போக்குவரத்து உள்ளது.சத்தியமங்கலம் அருகே பண்ணாரி செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலையில் கள்ளுக்கடை பிரிவு மற்றும் புதுவடவள்ளி முருகன்கோயில் மேடு என 2 இடங்களில் உள்ள பள்ளங்களின் குறுக்கே குறுகிய பாலம் இருந்ததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டது.

இந்த 2 பாலங்களையும் அகலப்படுத்தவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், தற்போது 2 புதிய பாலம் 4 இடங்களில் உள்ள மழைநீர் போக்கி கல்வெட்டுகள் அகலப்படுத்தும் பணி மற்றும் சத்தியமங்கலம் எஸ்ஆர்டி கார்னரில் இருந்து முருகன் கோவில் வரை சாலை மேம்பாட்டுப்பணி என ரூ.17 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கி உள்ளது. இந்த இடத்தில் வாகனங்கள் செல்வதற்காக பக்கவாட்டு பகுதியில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிப்பதற்கான காலக்கெடு 18 மாதம் என்ற நிலையில் ஓராண்டுக்குள் பணிகள் நிறைவு பெறும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: