×

விராலிமலை அருகே டிரம்செட் தொழிலாளியை தாக்கிய எஸ்ஐயை கண்டித்து சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு


விராலிமலை ஏப் 26: விராலிமலை அருகே டிரம்செட் தொழிலாளியை போலீசார் அடித்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் விராலிமலை - மணப்பாறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.விராலிமலை  காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி  வருபவர் மோகன் (26). இவர் நேற்று  இரவு 7.30 மணியளவில்  விராலிமலை - மணப்பாறை சாலையில் அத்திபள்ளம் பிரிவு சாலை அருகே விபத்து வழக்கு தொடர்பாக வரை படம் போட சென்ற இவர், வேலையை முடித்து விட்டு  வழியில் செல்லும் வாகன ஓட்டிகளை  நிறுத்தி குடிபோதையில் வாகனம் ஓட்டி செல்லுகின்றனரா என சோதனை செய்துள்ளார். அப்போது இந்த பகுதிக்கு வந்த அத்திபள்ளம் பகுதியை சேர்ந்த டிரம்செட் வாசிக்கும் வௌ்ளையன் மகன் பிச்சைகண்ணு (42) என்பவர் அங்கு பணி செய்து கொண்டிருந்த விராலிமலை சப்-இன்ஸ்பெக்டர் மோகனிடம் குடிபோதையில் நேற்று விராலிமலை போலீசார் இந்த பகுதிக்கு வந்து இருவர் மீது வழக்கு  பதிவு செய்துள்ளீர்கள்.

இன்றும் வந்து சோதனை செய்கிறீர்கள் எனக்கு முன்பு வேலை செய்த அனைத்து போலீசாரையும் தெரியும். இப்பகுதியில் உள்ள அரசியல் பிரமுகர்களையும் தெரியும் நீங்கள் செல்லுங்கள என்று  போதையில் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மோகன் பிச்சைகண்ணுவை முகத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது.அதில் பிச்சைகண்ணுவுக்கு முக்கில் இருந்து ரத்த வடிந்தது. இந்த தகவல் அறிந்த பிச்சைகண்ணுவின் உறவினர்கள் மற்றும் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் போலீசாரை கண்டித்து விராலிமலை- மணப்பாறை சாலை அத்திபள்ளி பரிவு ரோடு அருகே சாலை மறியல் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் டிஎஸ்பி சிகாமணி சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.  பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதனால் விராலிமலை - மணப்பாறை சாலையில்  சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

Tags : drummer worker ,Viralimalai ,
× RELATED விராலிமலை ஊராட்சிக்கு இறந்தவர்களின்...