×

பொன்னமராவதி ஒன்றியத்தில் 1,081 கண்மாய்கள் வறண்டன தண்ணீரின்றி மக்கள், கால்நடைகள் அவதி

பொன்னமராவதி, ஏப்.26:  பொன்னமராவதி ஒன்றியத்தில் 1,081கண்மாய்கள் தண்ணீர் இன்றி வறண்டு கிடப்பதால் கால்நடைகளுக்கு கூட தண்ணீர்கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் கடந்த மூன்று ஆண்டு காலமாக சரிவர மழைபெய்யவில்லை. இப்பகுதியில் ஒரு வருடம் மழைபெய்தால் மூன்று வருடம் விவசாயம் செய்யமுடியும். ஆனால் மூன்று வருடமாக தொடர்ந்து மழைபெய்யவில்லை என்பதால் இப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள். ஏந்தல், கண்மாய்கள் என 1,081கண்மாய்கள் தண்ணீரின்றி வரண்டு கிடக்கின்றது. கண்மாய்த் தண்ணீரை வைத்து நெல் நடவு மற்றும் விவசாயம் செய்துவந்தனர்.

மீன்வளர்ப்பது, ஆடு, மாடுகள் தண்ணீர்குடிப்பது, குளிப்பாட்டுவது போன்றவை நடப்பது வழக்கம். ஆனால் தொடர்ந்து மழைபொய்த்துள்ளதால் நெல்நடவு இல்லை. ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் குடிக்ககூட வழியில்லாமல் அவதிப்படும் நிலையுள்ளது.
 முன்பெல்லாம் இப்பகுதியில் இருந்து வைக்கோல் விற்பனைக்கு பல பகுதிகளுக்குச் செல்வார்கள். ஆனால் இப்போது சரியாக மழை இல்லாததால் மாடுகளுக்கு வைக்கோல் மதுரை மேலூர், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் இருந்து அதிக விலைகொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழைபெய்யும் போது வரத்துவாரிகள் சரியாக இல்லாதது. கண்மாய்களில் பெரும் தண்ணீரை முறையாக சேமித்துவைக்க  தூர்வாரி ஆழப்படுத்தாமல் இருப்பது, பல ஆண்டுகளுக்கு மேலாக கண்மாய்களில் மடைகள், கழுங்கிகள் புதிதாக கட்டாதது போன்றவை இதற்க காரணம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...