×

க.பரமத்தி அடுத்த துக்காச்சி ஊராட்சியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் 2 ஆண்டாக அதிகாரிகள் மெத்தனம்

க.பரமத்தி, ஏப்.26:  துக்காச்சி அருகே செம்மங்கரை அடுத்து நொய்யல் வாய்க்கால் பாலத்தில் மாதங்களுக்கு மேலாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருவதை தடுக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் துக்காச்சி ஊராட்சியில் செம்மங்கரை அடுத்த நொய்யல் வாய்க்கால் பாலம் வழியாக அப்பகுதிக்கு குடிநீர் செல்கிறது.பெருகி வரும் மக்கள் தொகைக்கு கேற்ப இப்பகுதி மக்கள் குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் ஒன்று கூடி குடியிருப்புகளுக்கு ஏற்ப புதிதாக குடிநீர் தொட்டி கட்டி சீரான குடிநீர் வழங்க வேண்டும் என ஒன்றிய நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில் துக்காச்சி ஊராட்சி செம்மங்கரை அருகே நொய்யல் வாய்க்கால் பாலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பைப் உடைந்து 2 மாதங்களாக குடிநீர் விணாகி வருகிறது. அத்தோடு அந்த வழியாக செல்லும் வாகனங்களின் மீது படும் அளவிற்கு மோசமான சூழல் உள்ளது. இதனால் அந்த இடத்தில் வீணாகும் குடிநீரை தடுக்கவும், குடிநீர் குழாயை சீரமைக்ககோரியும் பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித பயனும் இல்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
குடிநீர் பைப்பிலிருந்து வீணாகி வரும் குடிநீரை தடுக்க பொதுமக்கள் கல்லால் மறைத்து தடுத்துள்ளனர். இருப்பினும் தினசரி பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது என பொதுமக்கள் வேதனை அடைகின்றனர். எனவே ஒன்றிய நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி குடிநீர் பைப்பை சரிசெய்து தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Tachachi ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...