×

கரூரில் மாம்பழ குடோன்களில் அதிகாரிகள் சோதனை

கரூர், ஏப்.26: மாம்பழ குடோன்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். மாம்பழ சீசன் துவங்கியுள்ளதால் வெளியூர்களில் இருந்து பல ரகங்களில் மாம்பழங்கள் கரூருக்கு வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ரசாயன கல் வைத்து மாம்பழங்களை பழுக்க வைக்கிறார்களா என உணவுபாதுகாப்பு அதிகாரிகள்சோதனை நடத்தினர். கரூர் டவுண் ஜவகர்பஜார், ஆசாத் சாலை, அரவக்குறிச்சி அருகே உள்ள ராஜபுரம் ஆகிய இடங்களில் மாம்பழக் குடோன்களில் மாவட்ட நியமன் அலுவலர் சசிதீபா மற்றும் அலுவலர்கள் ஆய்வு நடத்தினர். ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை சாப்பிடுவோருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர். மாம்பழங்கள் இந்த ஆண்டு வரத்து குறைவாக இருக்கிறது. பழுக்க வைத்து விற்கும் நிலை என வியாபாரிகள் தெரிவித்தனர்.வாய்க்கால் விரைந்து கட்டிமுடிக்கப்படுமா?

Tags : mango kutones ,Karur ,
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...