×

திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மலேசியாவுக்கு கடத்த முயன்றவர் கைது

ஏர்போர்ட், ஏப். 26:  திருச்சி  விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கு கடத்த இருந்த ரூ.10  லட்சம்  மதிப்பிலான போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி  விமான நிலையத்திலிருந்து தினமும் துபாய், மலேசியா, சிங்கப்பூர்,  இலங்கை  உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் செல்கின்றன. அதேபோல் பல்வேறு  நாடுகளிலிருந்து விமானங்களும் இங்கு வருகின்றன. அதில் வரும் பயணிகளை   சோதனை செய்யும்போது சில பயணிகள் தங்கம் கடத்தி வருவதும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்தி வருவதும், அதிகாரிகளிடம்  அடிக்கடி சிக்குவதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு நேற்று முன்தினம் இரவு  விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சிவகங்கையை  சேர்ந்த பயணி ஒருவரின் பையில் இருமல் மருந்து போன்ற வடிவில் இருந்த போதைப்பொருளை, மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனை அந்த பயணி மலேசியாவிற்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதையடுத்து  போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம், அதிகாரிகள் போதைப்பொருளை ஒப்படைத்தனர்.  போதை பொருள் என்ன வகை என தெரியவில்லை.
மேலும் அந்த பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கடத்த இருந்த போதைப் பொருளின்  மதிப்பு ரூ.10 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : airport ,Trichy ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்