குடும்ப தகராறு திருச்சி ஜெயில் வார்டன் மாயம்

திருச்சி, ஏப். 26:   லால்குடி வாளாடியை சேர்ந்தவர் சியாம்சுந்தர். இவரது தம்பி சூரியநாராயணன் (40). திருச்சி மத்திய சிறையில் சிறை வார்டனாக உள்ளார். மேலும் சிறை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 4 வருடம் ஆகிறது. குழந்தை இல்லை. இதில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை விடுமுறையில் இருந்து வந்தார். அதன்பின் அவரது செல்போன் சுவிட்ஆப் செய்யப்பட்டுள்ளது. சூரியநாராயணன் குடும்பத்தினர் தொடர்பு கொள்ள முடியன்றும் முடியவில்லை. இதுகுறித்து கே.கே.நகர் போலீசில் அண்ணன் சியாம்சுந்தர் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து மாயமான சூரியநாராயணனை தேடி வருகின்றனர்.

Related Stories: