ஆத்தூர் தாலுகா அலுவலக இ-சேவை மையத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை

ஆத்தூர், ஏப்.26:  ஆத்தூர் தாலுகா அலுவலக இ-சேவை மையத்தில் போதிய ஊழியர்கள் இல்லாததால், சான்றிதழ் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கு, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் முதல் பட்டதாரி உள்ளிட்ட சான்றுகள் பெறுவதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. எனவே, தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மூலம், தினசரி 100க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த சேவை மையத்தில் 2 கணினிகள் இருந்தபோதும், ஒரு பணியாளர் மட்டுமே இருப்பதால், அவரால் அனைத்து பணிகளையும் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘ஆத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் போதிய ஆட்கள் இல்லாததால், பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே, கூடுதல் ஆட்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.  

Related Stories: