சேலம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு தொந்தரவு 15 பேருக்கு அபராதம்

சேலம்,  ஏப்.26: சேலம் ரயில்வே கோட்ட பகுதியில் இயங்கும் ரயில்களில், பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் தின்பண்டங்களை விற்பனை செய்வோர் மீதும், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் ரயில்களில் அசுத்தம் செய்வோர் மீதும் ரயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சேலம் ரயில்வே ஸ்டேஷனில்,  நேற்று பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர். இதில், அனுமதியின்றி வியாபாரம் செய்த 9 பேர், அத்துமீறி தண்டவாளத்தை கடந்த 3 பேர், ரயில் மீது கல் எறிந்த 2 பேர் உள்பட மொத்தம் 15 பேர் சிக்கினர். இவர்களை கைது செய்து ரயில்வே கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 15 பேருக்கும் மொத்தமாக ₹13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனிடையே, சேலம் டவுன் ரயில் நிலையத்தில் நடைபயிற்சி செல்வதால், பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதாக ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து சேலம் ரயில்வே பாதுகாப்பு படையினர், சேலம் டவுன் ரயில் நிலையத்தில் நடைபயிற்சி செல்லக்கூடாது என எச்சரித்துள்ளனர். மேலும், இந்த பகுதியில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: