நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பறக்கும்படை சோதனை

மே 23ம்தேதி வரை தொடரும்சேலம், ஏப்.26: நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வரும் மே 23ம் தேதி நடக்கிறது. அது வரை, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், பறக்கும் படையினரின் சோதனை தொடரும் என மாவட்ட தேர்தல அதிகாரி அறிவித்துள்ளார். இதுகுறித்து சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரோகிணி கூறியிருப்பதாவது: தமிழகத்தில், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறுவதால், அனைத்து சட்டமன்ற தொகுதிக்கும் பறக்கும்படையினர் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 18ம் தேதி நடந்து முடிந்தது. இதனால் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினரின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் மே மாதம் 23ம் தேதி வரை இருப்பதால், அனைத்து சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு பறக்கும் படை செயல்பட வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதனையடுத்து, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிக்கும், பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் சேலம் மாவட்டத்தின் 11 சட்டமன்ற தொகுதிக்கும் சேர்த்து, 33 பறக்கும் படையும், தமிழக-கர்நாடக எல்லை பகுதியில் 3 நிலை கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 23ம் தேதி வரை, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு செயல்படும். இவ்வாறு மாவட்ட தேர்தல் அதிகாரி கூறினார்.

Related Stories: