சேலம் பெரியார் பல்கலையில் தொலை நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

ஓமலூர், ஏப்.26: சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலை நிலைக் கல்வி நிறுவனமான, பிரைடு தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.

இதுகுறித்து பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் குழந்தைவேல் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில், நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தில் 62 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கான தேர்வு வரும் மே மாதம் 15ம் தேதி முதல் தொடங்குகிறது. பிரைடு மற்றும் பல்கலைகழக தொழிற்சார் புரிந்துணர்வு திட்டத்தில், சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு 2019ம் ஆண்டுக்கான தேர்வு, மே, 15ம் தொடங்கவுள்ளது.  இத்தேர்வு கால அட்டவணை, பல்கலைகழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு, மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க, இன்று (26ம் தேதி) கடைசி நாளாகும். விண்ணப்பம் www.periyaruniversity.ac.in எனும் பல்கலைகழக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: