ஆத்தூர் பகுதியில் விளைச்சல் இல்லாததால் நுங்கு வரத்து சரிவு

ஆத்தூர், ஏப்.26:  ஆத்தூர் பகுதியில் பனை மரங்களில் விளைச்சல் இல்லாததால், குறைவான அளவு நுங்கு விற்பனைக்கு வந்துள்ளது. ஆத்தூர் பகுதியில் உள்ள ஏரிக்கரைகள் மற்றும் ஊரணி கரைகள் என பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக கடும் வறட்சியினால் பனைமரங்கள் காய்ந்து கருகிய நிலையில் உள்ளது. இதனால் நுங்கு மரங்களில் காய்ப்பு தன்மை வெகுவாக சரிந்து விட்டது. இதனால் வழக்கமாக ஆத்தூர் நகரப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளான காந்திநகர், ராணிப்பேட்டை, கடைவீதி உள்ளிட்ட இடங்களில் விற்கப்படும் நுங்கு கடைகள் இந்தாண்டு வைக்கப்படவில்லை. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்தாண்டு இருந்த பனை மரங்கள் இந்தாண்டு குறைந்துள்ளதாலும், பெரும்பலான இடங்களில் கள் இறக்க அனுமதி வழங்கப்பட்டதாலும் நுங்கு வரத்து வெகுவாக குறைந்து விட்டது. இதனால் நுங்கு விலையும் உயர்ந்து, 3 நுங்கு ₹10க்கு விற்பனை செய்யப்படுகிறது,’ என்றனர்.

Related Stories: