வைகை கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கு கட்டண சலுகை

வாழப்பாடி, ஏப்.26: வாழப்பாடி வைகை கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் சேர்க்கைக்கு கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. வாழப்பாடி வைகை கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, 3ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மகளிரின்  முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்டுள்ள இக்கல்லூரியில், மாணவிகள் முதலாம் ஆண்டில் 95சதவீத தேர்ச்சியும், 2ம் ஆண்டில் 95 முதல் 100சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர். மாணவிகள் படிப்பிலும், பொது அறிவிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குகின்றனர். பிஏ தமிழ், ஆங்கிலம், பிஎஸ்சி கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், பிகாம், பிகாம் சி.ஏ, பிசிஏ, 2019 - 2020ம் ஆண்டு மாணவிகளின் சேர்க்கையில், பல சலுகைகளை வழங்கியுள்ளது.

பிளஸ்2 தேர்வில் 550 மதிப்பெண்களுக்கும் மேல் பெற்றிருந்தால், 3 வருடமும் 50சதவீத கட்டணச் சலுகையும், 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தால் 25சதவீத கட்டணச் சலுகையும், மற்ற அனைத்து மாணவிகளுக்கும் சேர்க்கையின்போது ₹2 ஆயிரம் முதல் ₹3 ஆயிரம் வரை கட்டணம் சலுகையும் வழங்கி ஊக்குவிக்கின்றனர். மாணவிகள் கல்வி கட்டணத்தை பல தவணைகளில் செலுத்தலாம். 3ம் ஆண்டு இறுதியில் பிளேஸ்மென்ட் ட்ரெய்னிங் மூலம், கேம்பஸ் இன்டர்வியூ வைத்து வேலை வாய்ப்பும் உருவாக்கி தரப்படுகிறது. எனவே பெற்றோர்கள் அனைவரும், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளை வைகை மகளிர் கல்லூரியில் சேர்க்க ேவண்டும் என, வைகை கல்லூரி நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: