திண்டிவனம் ஊரல் கிராமத்தில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைக்கு தீவைக்கும் மர்ம ஆசாமிகள்

திண்டிவனம், ஏப். 25:   திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊரல் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக தயாரிக்க வேண்டும். ஆனால் துப்புரவு பணியாளர் குப்பைகளை வாரம் ஒரு முறை மட்டுமே சேகரிப்பதாகவும், அப்படி சேகரிக்கும் குப்பைகளை சாலையின் ஓரத்தில் மொத்தமாக கொட்டி விட்டு செல்வதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இவ்வாறு சாலை ஓரத்தில் கொட்டப்படும் குப்பைகளை மர்ம நபர்கள்  தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் திண்டிவனம்-வந்தவாசி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்னையில் தலையிட்டு துப்புரவு பணியாளர்களை வைத்து தினமும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.

Related Stories: