சங்கராபுரத்தில் அடிக்கடி மின்வெட்டு

சங்கராபுரம், ஏப். 25: சங்கராபுரம் தாலுகாவின் தலை நகரமாகும். இங்கு சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் சங்கராபுரம் வந்து சிறு தொழில்கள் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சங்கராபுரம் நகரத்தில் திடீரென மின் வெட்டு ஏற்படுகின்து. இதுகுறித்து சங்கராபுரம் சமூக ஆர்வலர் ஆசிம்சர்தார் கூறுகையில், சங்கராபுரம் அதிக கிராமங்களை கொண்ட பகுதியாக உள்ளது இங்கு வெளியூர்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வந்து சில்லரை வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அடிக்கடி சங்கராபுரம் நகரத்தில் எந்த ஒரு முன் அறிவிப்பின்றி மின்தடை ஏற்படுகின்றது. இதனால் பொதுமக்கள், வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மின் அதிகாரி அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொண்டாலும் சரியான பதில்கள் இல்லை. எனவே மின்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கூறினார். எனவே இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: