×

மாநகராட்சி இடங்களில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு

கோவை, ஏப்.25:  ேகாவை மாநகராட்சியில் ரிசர்வ் சைட், பூங்கா இடம் போன்றவற்றை அபகரித்தால் அபராதம் விதிப்பது பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் தொடர்ந்து மாநகராட்சி இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.
 கோவை மாநகராட்சியில் மைதானம், பூங்கா, ரிசர்வ் சைட், காலியிடம், நடைபாதை போன்றவற்றை தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் ஆக்கிரமிப்பது அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டில் மாநகராட்சியின் சுமார் 50 ேகாடி ரூபாய் மதிப்பிலான நிலம் அபகரிப்பில் இருந்து மீட்கப்பட்டது. காலியிடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைப்பதும், கம்பி வேலி அமைப்பதும் அவ்வப்போது நடக்கிறது. சிலர் அரசியல் செல்வாக்குடன் மாநகராட்சி இடங்களை அபகரித்து சொந்த பயன்பாட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

 மாநகராட்சி இடங்களில் மீட்காமல் மண்டல அலுவலக அதிகாரிகள், நகரமைப்பு பிரிவினர் கமிஷன் வாங்கி கொண்டு கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதாக தெரிகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை மீட்கும் பணி கடந்த சில மாதங்களாக நடக்கவில்லை. சில இடங்களில் மாநகராட்சி இடத்திற்கான அறிவிப்பு பலகையும் மாயமாகி விட்டது.  கோவை வ,உ.சி பூங்கா மைதானம், நேரு ஸ்டேடியம், காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் கடைகள், நிலங்களை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அனுமதியின்றி மாநகராட்சி இடத்தில் வணிக கடைகள் செயல்படுவது அதிகமாகி விட்டது. மாநகராட்சி இடங்களை அபகரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம்காட்டி வருகின்றனர்.  கடந்த ஆண்டில் சுமார் 15 ேகாடி ரூபாய் மதிப்பிலான மாநகராட்சி நிலத்தை அபகரித்தவர்களுக்கு மொத்தமாக 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டது. பெயரளவிற்கு விதிக்கப்படும் இந்த அபராதம் தொகையால் மாநகராட்சி சொத்துகள் அபகரிக்கப்படுவது வழக்கத்தை காட்டிலும் அதிகமாகி வருவதாக தெரியவந்துள்ளது. நில அபகரிப்பை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.  அதிகபட்ச அபராதம் விதிக்கவேண்டும் என ெபாதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : corporation areas ,
× RELATED பெங்களூரு உள்ளிட்ட 11 மாநகராட்சி...