×

சிறுவாணி நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை

கோவை, ஏப்.25:  மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சிறுவாணி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாளாக மழை பெய்தது. நேற்று மழை ஓய்ந்த நிலையில், நீரோடைகளில் வெள்ளம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக காஞ்சிர புழா ஓடை, முக்தியாறு, பட்டியாறு, வெள்ளிங்கிரி ஓடை உட்பட 27 ஓடைகளில் இருந்து அணையின் நீர்தேக்க பகுதிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இரவு நேரத்தில் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்கிறது. இது தொடர்பாக குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூறுகையில், ‘‘ கடந்த 5 மாதமாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் உள்ள ஓடைகள் வறண்டு காணப்பட்டது. அணையை சுற்றியுள்ள வனமும் பசுமை தோற்றத்தை இழந்து காய்ந்து போனது. இந்நிலையில் தற்போதைய மழையால் நீர் தேக்க பகுதிகள் பசுமை தோற்றத்திற்கு மாறியுள்ளன. ஓடைகளின் மூலமாக தினமும் சுமார் 5 கோடி லிட்டர் தண்ணீர் வருகிறது. மேலும் சில நாட்களுக்கு அைணக்கு நீர் வரத்து இருக்கும். கோடை  ெவயிலை சமாளிக்கும் அளவிற்கு மழை பெய்துள்ளது. வரும் மே மாதம் கோவையில் குடிநீர் பிரச்னை இருக்காது, ’’ என்றனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு