×

அதிமுக ஆட்சியின் அவலங்களை வீடு தோறும் கொண்டுசெல்லுங்கள்

சூலூர், ஏப். 25:  அதிமுக ஆட்சியின் அவலங்களை வீடு தோறும் கொண்டு செல்லுங்கள் என சூலூர் தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி கூறினார்.  ேகாவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பணியாற்றும்  திமுக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கோைவ மாவட்ட  திமுக அலுவலகத்தில் நடந்தது. கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்திக்  எம்எல்ஏ தலைமை தாங்கினார். இதில், சூலூர் தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள்  அமைச்சருமான ஏ.வ.வேலு பேசியதாவது:பெண்கள் மனது வைத்தால் எதுவும் செய்யலாம். குடும்பத்தை வழிநடத்துவதில் மட்டுமல்ல, எந்த ஒரு பணியையும் திறம்பட செய்யக்கூடியவர்கள் பெண்கள். வீடு தோறும் சென்று, பெண்களால் அதிகளவில் வாக்கு சேகரிக்க முடியும். மத்திய-மாநில அரசுகள், நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டன. ஜிஎஸ்டி வரி காரணமாக விலைவாசி  பலமடங்கு உயர்ந்துவிட்டது. சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் பருப்பு மற்றும் மளிகை  பொருட்களை பாதி விலையில் மக்களுக்கு வழங்கியவர் தலைவர் கலைஞர். மகளிர் சுயஉதவி குழுவை ஆரம்பித்து அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்த்தவர் கலைஞர்.  பல  மணிநேரம் கால்கடுக்க நின்று, மகளிர் சுய உதவிக்குழுவிற்கு சுழல்நிதி வழங்கியவர்  தலைவர் மு.க.ஸ்டாலின். சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்  நமது வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி வெற்றி பெற உங்கள் பங்கு சிறப்பானதாக அமைய  வேண்டும்.

இவ்வாறு எ.வ.வேலு பேசினார். சூலூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி பேசுகையில், ‘’அதிமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டு காலத்தில் மக்கள் சொல்ல முடியாத அளவுக்கு துயரம் அனுபவிக்கின்றனர். விளைநிலங்கள் வழியாக மின்கோபுரம் அமைத்தல், விவசாய நிலங்களை அழித்து எட்டு வழிச்சாலை திட்டம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு, நீட் தேர்வு விவகாரத்தில் மவுனம், ஹைட்டோகார்பன் மற்றும் நியூட்டிரினோ திட்டத்தில் மக்கள் நலனுக்கு எதிராக, மத்திய அரசுடன் கூட்டு என இப்படி எண்ணற்ற மக்கள் விரோத செயல்களை கூறலாம். இந்த அவலங்களையெல்லாம் வீடு தோறும் கொண்டுசென்றுவாக்குசேகரிக்க வேண்டும்.
இத்தொகுதி வெற்றி மூலம் அதிமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும்’’ என்றார்.   கூட்டத்தில், கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல்  செல்வராஜ், கோவை புறநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், திமுக பொதுக்குழு  உறுப்பினர் ராஜராஜேஸ்வரி, மகளிர் அணி அமைப்பாளர்கள் சரஸ்வதி, மாலதி, ரங்கநாயகி,  ரத்னா, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் கனிமொழி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : AIADMK ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...