தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் எஸ்.ஐயை மாற்றக்கூடாது தாசில்தாரிடம் பெண்கள் மனு

சாத்தான்குளம், ஏப்.25: தட்டார்மடம் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐயை மாற்றம் செய்யக்கூடாது என நடிகை எமி உள்ளிட்ட பெண்கள் சாத்தான்குளம் தாசில்தாரிடம் மனு அளித்தனர். சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர்  கஜேந்திரன், எஸ்.ஐயாக சுரேஷ்குமார் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருபவர்களிடம் அநாகரீகமாக செயல்படுவதாகவும், பெண்களிடம் தவறாக நடக்க முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும் புகார் கொடுப்பவர் மற்றும் குற்றச்சாட்டப்பவர்களிடம் கட்ட பஞ்சாயத்து நடத்தி வருவதாகவும் புகார் கூறப்பட்டது. அமமுக மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஆனந்தராஜா தலைமையில் அமமுக ஒன்றிய செயலாளர் திவாகரன் உள்ளிட்ட பலர், ‘பொதுமக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன், எஸ். ஐ சுரேஷ்குமார் ஆகியோரை பணிமாற்றம் செய்ய வேண்டும் எனவும்,

அவர்கள் நடவடிக்கையை கண்டித்து மே 8ம் தேதி சாத்தான்குளம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் சாத்தான்குளம் தாசில்தார் ஞானராஜ், டிஎஸ்பி பாலச்சந்திரன் ஆகியோரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் நேற்று திரைப்பட நடிகை கொம்மடிக்கோட்டை எமி தலைமையில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் சாத்தான்குளம் தாசில்தார் (பொறுப்பு) எலிசபெத்மேரியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன், எஸ்.ஐ சுரேஷ்குமார் முறையாக செயல்பட்டு வருகின்றனர். சிலர் வேண்டுமென்றே அவர்கள் மீது  புகார் கூறி வருகின்றனர். எந்த வழக்கையும் துரிதமாக முடித்து வருகின்றனர். எனவே அவர்களை எக்காரணம் கொண்டும் பணிமாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி மே 8ம்தேதி போட்டியாக சாத்தான்குளம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மனுவை பெற்ற தாசில்தார், கலெக்டருக்கு பரிந்துரைப்பதாக  தெரிவித்தார்.

Related Stories: