கடையம் பழக்கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

கடையம், ஏப். 25:  கடையம் பகுதி பழக்கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். தற்போது மாம்பழ சீசன் என்பதால், கடையம் பகுதியில் உள்ள பழக்கடைகளில் கார்பைடு கற்கள் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா? என கடையம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அழுகிய நிலையில் இருந்த சுமார் 3 கிலோ பழங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் கார்பைடு கற்களால் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் உடல் உபாதைகள் குறித்தும் வியாபாரிகளை அறிவுரைகளை வழங்கினர்.

Related Stories: