துறையூர் பகுதியில் சூறைக்காற்றால் பலத்த ேசதம்

துறையூர், ஏப்.25:  துறையூர் மற்றும் உப்பிலியபுரம் சுற்று வட்டார பகுதிகளில் வீசிய சூறை காற்று பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.  துறையூர் சுற்று வட்டார பகுதியில் நேற்று முன்தினம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த சூறை காற்றுடன் மழை  பெய்தது. துறையூரை சுற்றியுள்ள பகுதிகளான சிங்களாந்தபுரம், காளிப்பட்டி, கண்ணனூர் ஆகிய பகுதிகளில் பலத்த சூறை காற்று வீசியது. இதில் சிங்களாந்தபுரம் ஏரிக்கரையில் மனோகரன் என்பவரின் 600 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. இளங்கோவன் காட்டில் 250க்கு மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து கிடந்தன. பெரியசாமி என்பவரின் தகர வீட்டின் மேற்கூரை தகரம் 400 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டது. அவர் வீட்டிற்கு முன் இருந்த மின்கம்பம் முறிந்து விழுந்தது.  இதேபோல் உப்பிலியபுரம் பகுதியில் மாராடி, கோட்டப்பாளையம் பகுதியில் 5 எக்கரில் 3 ஆயிரம் வாழை மரங்கள் சூறைக்காற்றில் அடியோடு சாய்ந்தன. எனவே விவசாயிகள் தங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: