திருச்சி விமான நிலைய தேவைக்காக d 4.60 கோடி செலவில் மின் சோலார் பேனல்கள்

ஒரு மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டம்ஏர்போர்ட், ஏப்.25:  திருச்சி விமான நிலைய தேவைக்காக ரூ.4 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் மின்சார சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நாளை (26ம் தேதி) இதன் துவக்க விழா நடைபெறுகிறது. திருச்சி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தியதிலிருந்து  விமான நிலையத்திற்கு விரிவாக்கப் பணிகளும், பராமரிப்பு பணிகளும் நடந்து வருகின்றன.  மற்றொரு புதிய முனையம் அமைப்பதற்கான ஆயத்த பணிகளும் நடந்து வருகின்றன. இங்கிருந்து துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்களும், வெளிநாடுகளிலிருந்து விமானங்களும் அதிகளவில் வந்து செல்கின்றன.

இன்னும் அதிக விமானங்கள் இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்படும் என்று விமான நிலைய நிர்வாகமும், மத்திய அரசும் ஏற்கனவே தெரிவித்திருந்தன. இந்நிலையில் விமான நிலைய மின்சார தேவைகளுக்காகவும், விரிவாக்க பணி தேவைகளுக்காவும் ரூ.4 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் சோலார் பேனல்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதிலிருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மின்சாரம் தற்போதைக்கு போதிய மின்சாரமாகவும் இன்னும் வரும் காலங்களில் விமான நிலையம் விரிவுபடுத்தும்போது அதிக மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மேலும் நாளை இதன் துவக்க விழா நடைபெறும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Related Stories: