தேர்தல் பூத் சிலிப் கேட்டதால் வாலிபரை தாக்கிய விஏஓ உட்பட 3 பேர் மீது வழக்கு

கும்பகோணம், ஏப். 25: தேர்தல் பூத் சிலிப் கேட்டதால் வாலிபரை தாக்கிய விஏஓ உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் முகமது உசேன் (48). இவர் கடந்த 15ம் தேதி தனக்கு தேர்தலில் வாக்களிக்க பூத் சிலிப் கேட்டு விஏஓ அலுவலகத்துக்கு சென்றார். ஆனால் அங்கு விஏஓ இல்லாததால், கும்பகோணம் ஆர்டிஓவுக்கு தொலைபேசியில் புகார் செய்தார்.

இதையடுத்து கடந்த 17ம் தேதி முகமது உசேனின் வீட்டுக்கு வந்து அவரிடம் ஏன் ஆர்டிஓவிடம் முறையிட்டாய் என்று கூறி விஏஓ சுரேஷ் தகராறு செய்தார். மேலும் சட்டையை பிடித்து இழுத்து அடித்துள்ளார். பின்னர் கிராம உதவியாளர்கள் தங்கராசு, ராதாகிருஷ்ணனை தொலைபேசியில் சம்பவ இடத்துக்கு வருமாறு அழைத்து வந்தார். பின்னர் இருவரும் வந்து முகமது உசேனை தாக்கியுள்ளனர். இதுகுறித்து திருநீலக்குடி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் முகமது உசேன் புகார் செய்தார். புகாரின்பேரில் விஏஓ சுரேஷ் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: