தேர்தல் விதிமுறையை தளர்த்தி மே தினம் கொண்டாட அனுமதி அளிக்க வேண்டும் தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு

தஞ்சை, ஏப்.25: தேர்தல் விதிமுறையை தளர்த்தி மே தினத்தை தொழிற்சங்கங்கள் கொண்டாட அனுமதி அளிக்க வேண்டும் என ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு ஏஐடியூசி பொதுச்செயலாளர் மூர்த்தி தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: மே தினம் தொழிலாளர் உரிமை திருநாளாகும். 8 மணி வேலை நேரத்தை வலியுறுத்தி போராடி தூக்கு தண்டனை பெற்ற தியாகிகளின் நினைவாக இத்தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் அனைத்து மத்திய, மாநில மற்றும் வட்டார தொழிற்சங்கங்களும் ஆண்டுதோறும் மே தினத்தன்று அலுவலங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பணிபுரியும் இடங்களிலும் தங்களது சங்க ெகாடிகளை ஏற்றியும், சென்னை மே தின பூங்காவில் உள்ள மே தின தியாகிகள் நினைவு சின்னத்துக்கு அஞ்சலி செலுத்தியும், மாலையில் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்களை நடத்தியும் மே தினத்தை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய தேர்தல்கள் நடந்த போதும் மே தினம் வந்துள்ளது. ஆனால் மே தின நிகழ்வுகள் தடுக்கப்பட்டதில்லை. எனவே மே தினத்தன்று கொடிமரங்களை நாட்டாவும், கொடியேற்றவும், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்களை நடத்தவும், தொழிற்சங்கங்களை அனுமதிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரைக்கு மாறும், ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்த ேகட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories: