கோடை உழவின் மூலம் மக்காசோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? வேளாண்துறை விளக்கம்

தஞ்சை, ஏப்.25: கோடை உழவு   மேற்கொள்வதன் மூலம் மக்கா சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலை   கட்டுப்படுத்துவது எப்படி? என வேளாண்துறை விளக்கம் அளித்துள்ளது. தஞ்சையில்  மக்காச்சோளம் வீழ்படை புழு பூச்சியின் தாக்குதல் காரணமாக அனை த்து   பகுதியிலும் பெருமளவு மகசூல் இழப்பு ஏற்பட்டது. இதனால் விவசாயி களு க்கு   கிடைக்க வேண்டிய சராசரி மகசூல் பாதி அளவு கூட கிடைக்கவில்லை. இந்தப்   படைப்புழுவின் முட்டைகள் மற்றும் கூட்டுப்புழுக்கள் பயிர் அறுவடைக்கு பின்   மண்ணுக்குள் சென்று மறைந்து தற்போழுது வரை மண்ணுக்குள் உயிருடன் இருக்க   வாய்ப்புள்ளது.

இனிவரும் காலங்களில் மக்காசோள பயிரை சாகுபடி  செய்யும்  பொழுது மண்ணுக் குள் இருக்கும் முட்டைகள் மற்றும் கூட்டுப்   புழுக்களிலிருந்து பூச்சிகள் உற்பத்தியாகி இந்த வருடமும் பயிரை தாக்க நிறைய   வாய்ப்புள்ளது. தற்போழுது கோடை மழை ஆங்காங்கே பரவலாக பொழிய   ஆரம்பித்துள்ளது. கோடை மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் உடனடியாக  கோடை உழவு  செய்ய வேண்டும். கோடை உழவு செய்வதால் படைப்புழுவின்  கூட்டுப்புழுக்கள்  மண்ணு க்கு மேலே கொண்டுவரப்பட்டு பறவைகளால்  உட்கொள்ளப்பட்டு  படைப்புழுக் களின் பெருக்கம் குறைக்கப்படுகிறது. மேலும்  கோடை உழவினால்  முந்தைய பயிரின் கழிவுகள் மக்க வைக்கப்படுகிறது.

கோடை  மழை நீர் நன்றாக  கீழ்நோக்கி உறிஞ்சப்படுகிறது. மண் அரிமானம் தடுக்கப்  படுகிறது. மண்ணில்  காற்றோட்டம் அதிகரிக்கப்பட்டு நிலம் வளமாக்கப்படு  கிறது. உழவினால் அருகு  மற்றும் இதர களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும்  இனக்கவர்ச்சிப் பொறி  வைத்தும், சொக்கப்பனை எரித்தல் மூலமாகவும் தற்போது  சாகுபடி செய்யப்பட்டுள்ள  இதரப் பயிர்களில் உள்ள படைப்புழுவின் தாய்  அந்துப் பூச்சியை கவர்ந்து  அழிப்பதன் மூலம் படைப்புழுவின் பெருக்கத்தை  கட்டுப்படுத் தலாம். ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகள்  மற்றும் கோடை உழவினை பின்பற்றி  மக்காச்சோள படைப்புழுவின் தாக்குதலை முன்  கூட்டியே சிறப்பாக கட்டுப்படுத்த  மக்காச்சோள சாகுபடி செய்யலாம் என  வேளாண்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: