சித்திரை பட்டத்தில் கம்பு பயிரிட ஏற்ற ரகங்கள் வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள் விளக்கம்

தஞ்சை, ஏப்.25: சித்திரை பட்டத்தில் கம்பு பயிரிடுவதற்கு ஏற்ற ரகங்கள் குறித்து வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், விவசாயிகளுக்கு விளக்கமளித் துள்ளனர். தமிழ்நாட்டில்   கம்பு பயிர் மாசி மற்றும் சித்திரை பட்டத்தில் இறவையிலும், ஆடி மற்றும்   புரட்டாசி பட்டத்தில் மானாவாரியிலும் பயிரிடப்படுகிறது.இப்பயிருக்கு   குறைந்த தண்ணீர் (300-450மில்லி லிட்டர்) போதுமானது. ஆகவே சித்திரை   பட்டத் தில் குறைந்த நீரை பயன்படுத்தி கம்பு சாகுபடி செய்யலாம். பட்டம்   மற்றும் ரகங்கள்: சித்திரை பட்டம் (மார்ச்-ஏப் பயிரிடுவதற்கு ஏற்ற  ரகங்கள்  கோ7 ,கோ9, கோ(சியு)9ஜசிஎம்வி 221, த.வே.பவீரிய கம்பு கோ9,கோ10  ஆகும்.  நாற்ற ங்கால்.ஒருஎக்டேர் நிலத்திற்கு தேவையான நாற்றகளை பெறுவதற்கு  7.5  சென்ட் நாற்றங்கால் போதுமானது. நாற்றங்கால் படுக்கையில் விரல்கள்  மூலம் 1  செ.மீ குறைவான ஆழத்தில் சிற்றோடை திறக்க வேண்டும்.

7.5 சென்டில்  3.75 கிலோ  விதைகள் தேவை (0.5 கிலோ,சென்ட் )500 கிலோ தொழு உரம் அல்லது  மக்கிய உரம்  து£வி விதைகளை கைகளால் மிருதுவாக மூட வேண் டும். எக்டருக்கு  12.5 டன் தொழு  உரம் அல்லது மக்கிய உரம் உழுவதற்கு முன் இடவேண்டும்.  எக்டருக்கு  அசோஸ்பைரில்லம் 10 பாக்கெட்டுகள் மற்றும் பாஸ் போபாக்டீரியா 10   பாக்கெட்டுகள் அல்லது அசோபாஸ் 20 பாக்கெட்டுகள், 25 கிலோ மண் மற்றும் 25   கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.

சால் மற்றும் வரப்புகளை (3   வரப்புகளுக்கு) 6மீ.நீ.மற்றும் 45 செ.மீ. அகலம் கொண்டு அமைக்க வேண்டும்.   தானியங்களை ஊடுபயிர்களில் விதைக்கும் போது வரப்பு 6 மீ.நீ. தவிர 30   செ.மீட்டர் இருக்க வேண்டும். தழைச்சத்து மணிச்சத்து , சாம்பல் சத்து எக்டர்   70க்கு 35க்கு35 என்ற அளவில் இடவேண்டும்.  நாற்று நடுதல் அல்லது விதைத்தல்   15முதல் 18 நாட்கள் வயதிருக்கும் நாற்றகளை நட வேண்டும். எல்லா   ரகத்திற்குமான இடைவெளி 45 செ.மீட்டருக்கு15 செ.மீ ஆழம் 3 முதல்5   செ.மீஇருக்க வேண்டும். நேரடி விதை விதைக்க கம்பு விதைகளை 2சத பொட்டாசியம்   குளோரைடு 3 சத சோடியம் குளோரைடில் 16 மணி நேரம் ஊற வைத்தபின் 5 மணிநேரம்   நிழலில் உலர்த்துவதால் விதையின் முளைப்புதிறன் அதிகரி க்கும். பார் மற்றும்   வாய்க்கால் முறையில் நடவு செய்வதற்கு 5 கிலோ விதை தேவை ப்படும். விதைகளின்   இடைவெளி 4-5 செ.மீ இருக்க வேண்டும். 5லிருந்து 8முறை தண்ணீர் பாய்ச்ச   வேண்டும். இலைகள் மஞ்சள் நிறத்திற்கு மாறி உலர்ந்த தோற்றத்தில்   இருக்கும். தானியங்கள் கடினமான இருக்கும் தூனிய கதிரை தனியாக அறுவடை செய்து   அதிக மகசூல் பெறலாம் என வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராஜேஷ்குமார், ராமசுப்ரமணியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: