டெல்டா மாவட்டங்களில் நிலக்கடலைக்கு உரிய விலை கிடைக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

தஞ்சை,ஏப்.25: நிலக்கடலைக்கு உரிய விலை கிடைக்குமா? என விிவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் தென்னை, மா, முந்திரி, சவுக்கு உள்ளிட்ட லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர்.  இதையடுத்து டெல்டா மாவட்ட விவசாயிகள், மணல் பாங்கான பகுதிகளில் உள்ள மேட்டு நிலங் களிலும் தண்ணீர் வசதி உடைய கடற்கரையோர நிலங்களிலும் குறுகிய காலத்தில் பலன் தரக்கூடிய நிலக்கடலை சாகுபடியை செய்துள்ளனர்.

இதில் 105 நாட்கள் பயிரான நிலக்கடலை நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஒரு முறையும் மே மற்றும் ஆகஸ்டு மாதங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது நவம்பர், டிசம்பர் மாதங்களில் பயிர் செய்யப்பட்ட நிலக்கடலை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது நிலக்கடலை கிலோ ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. 40 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.1200 வரை வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யப் படுகிறது. நிலக்கடலை உணவிற்காகவும், எண்ணெய் தயாரிக்கவும் பயன்படுகிறது. இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளும் வாங்கி செல்கின்றனர்.நிலக்கடலைக்கு உரிய விலை கிடைக்காததால் செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியவில்லை. எனவே தமிழக அரசு நிலக்கடலை உரிய விலையை நிர்ணயித்து கொள்முதல் செய்து கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: