×

புதுகை பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று திரியும் கால்நடைகள் வாகன ஓட்டிகள் அச்சம்

புதுக்கோட்டை, ஏப்.25:   புதுக்கோட்டை புதிய பேருந்து  நிலையத்திற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து பேருந்துகள்  வந்து செல்கிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து  செல்கின்றனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல், திருயம்,  மியூசியம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்கள் இருப்பதால் சுற்றுலா பயணிகள்  வந்து செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டிருப்பதால் பேருந்து  நிலையத்திற்கு சற்று அதிகமாக பேருந்துகள் வந்து செல்கின்றனர்.  தற்போது புதுகை பேருந்து நிலையத்திற்குள் எப்போதும் இல்லாத அளவிற்கு கால்நடைகள் கேட்பாரற்று சுற்றி திரிகிறது. பெரிய மாடுகள்,  கன்றுக்குட்டிகள் என விதவிதமாக சுற்றி திரிகிறது. இதனால் பேருந்து  நிலையத்திற்குள் வரும் பேருந்துகள் திரும்ப முடியாமல் ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர். கால்நடைகள் நகரவில்லை என்றால் பேருந்து ஓட்டுனர்கள்  அதிக ஒலி எழுப்பும ஹரன்களை பயன்படுத்துகின்றனர்.

இதனால் பேருந்து  நிலையத்தில் பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள், பெரியயோர்கள்,  குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதபோல் பேருந்துக்காக காத்திரும்  பயணிகள் நிற்கும் பகுதிக்கு மாடுகள் செல்லும் பயணிகள் அச்சத்துடன் நகர்ந்து  செல்கின்றனர். இப்படி பலமுறை பேருந்து பிடிப்பதற்குள் அங்கும் இங்கும்  கால்நடைகள் சுற்றி திரிவதால் பயணிகள் மிகவும் அச்சத்துடன் பேருந்து  நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தகுந்த  நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று ஓட்டுனர்கள், பயணிகள  கோரி
க்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:  பேருந்து  நிலையத்தில் கால்நடைகள் சுற்றி திரிவால் பேருந்துகள் செல்லுவதில் தடை  ஏற்படுகிறது. பயணிகள் நாங்கள் காத்திருக்கும்போது கால்நடைகள்  மூர்க்கத்தனமாக விளையாடிக்கொண்டு நாங்கள் நிற்கும் பகுதிக்கு வருகிறது.  வாலை சுழட்டிக்கொண்டு செல்வதால் வால் பயணிகள் மேல் படுகிறது. சில  நேரங்கள் பயணிகளின் கண்களில் பட்டுவிடுகிறது. மேலும் பேருந்து ஓட்டுனர்கள் பேருந்தை திரும்பும்போது குருக்கே கால்நடைகள்  நின்று விடுகிறது. இதனால் ஓட்டுனர்கள் மிகுந்த சிரமங்களை  சந்திக்கின்றனர். இதனால் தேவையில்லாத விபத்துகள் ஏற்படும் அபாயம்  ஏற்பட்டுள்ளது. இதனால் உரிய நடவடிக்கை எடுத்து கால்நடைகளை பேருந்து  நிலையத்திற்குள் வராத வகையில் அப்புறப்படுத்த வேண்டும் என்றனர்.

Tags : motorists ,bus stop ,
× RELATED ஈரோட்டில் குறைந்த கட்டணத்தில் உடனடி...