×

பொன்னமராவதி ஒன்றியத்தில் பொதுமக்கள் பயன்பாடின்றி கிடக்கும் குப்பை தொட்டிகள்

பொன்னமராவதி, ஏப். 25: பொன்னமராவதி ஒன்றியத்தில் பொதுமக்கள் பயன்பாடின்றி குப்பை தொட்டிகள் இறக்கி வைக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளில் பெறப்படும் குப்பைகளை கொட்டுவதற்காக ஊராட்சிகள் தோறும் மக்கள்தொகை அடிப்படையில் 2 முதல் 10 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டது. இந்த தொட்டிகளில் கொட்டப்பட்ட குப்பைகளை அப்புறப்படுத்த முடியால் பல ஊராட்சிகளில் இந்த தொட்டிகளை பயன்படுத்தாமல் வைத்துள்ளனர்.
இந்நிலையில் மக்களவை தேர்தல் அறிவிக்கப்படும் ஒரு சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 ஊராட்சிகளில் 4 முதல் 20 தொட்டிகள் வரை தூய்தை பாரத இயக்கம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் என பெயர் எழுதி கொண்டு வந்து ஊராட்சி மன்ற அலுவலகங்களின் அருகில் இறக்கப்பட்டு கிடக்கிறது.

ஏற்கனவே கொடுத்த குப்பை தொட்டிகளை முறையாக பயன்படுத்த முடியாத சூழலில் இப்போது அதிகளவு கொண்டு வந்து இறக்கினால் அதை எப்படி பயன்படுத்த முடியும். ஊராட்சிக்கு வரும் நிதிகளில் இதுபோன்ற பொருட்களுக்கே பாதி பணத்தை பிடித்து விடுகின்றனர். அப்புறம் தெருவிளக்கு, குடிநீர் பணிகளை நாங்கள் எவ்வாறு மேற்கொள்வது என்று ஊராட்சி செயலாளர்கள் புலம்பி வருகின்றனர். ஊராட்சியின் தேவையறிந்து அதற்கேற்ப ஒதுக்கீடு செய்தால் அதை பயன்படுத்த முடியும். குடிநீர் பற்றாக்குறை பல இடங்களில் உள்ள நிலையில் அரசு பணம் இப்படி பயன்பாடின்றி கிடப்பதை பார்த்து பலர் ஆதங்கப்படுகின்றனர்.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...