மேச்சேரி அருகே கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் கட்டுமான பணி

மேச்சேரி, ஏப்.25: மேச்சேரி அருகே குட்டப்பட்டியில், ரயில்வே aமேம்பாலம் அமைக்கும் பணி 2ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் கிராம மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேச்சேரி அருகே குட்டப்பட்டியில் தனியார் இரும்பு தொழில் சாலை அருகே ரயில்வே கேட் அமைத்துள்ளது. இந்த சாலை மேச்சேரி, எடப்பாடி நெடுஞ்சாலை இணைக்கும் சாலை என்பதால், 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருக்கும். இந்த ரயில் பாதை வழியாக மேட்டூர் தெர்மல், பொட்டனேரி இரும்பு தொழிற்சாலைக்கு ரயில் மூலம் நிலக்கரி கொண்டு செல்வதால், அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதை தவிர்க்க, கடந்த 2017ம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு, ரயில்வே நிர்வாகம் பாலம் கட்டும் பணியை முடித்தது. ஆனால், இணைப்பு பாலம் கட்டும் பணியை தொடங்காமல், அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதனால், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள், 10கி.மீ தொலைவிற்கு சுற்றிச்சென்று சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணியை விரைவில் முடிக்க ேவண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: