×

சகல நலமும் பெற சம்மணமிட்டு சாப்பிடுங்கள்

அத்தியாவசியம்... அத்தியாவசியம்... என்ற பெயரில் புதுப்புது நாகரிங்களை நோக்கி பயணிப்பதே நமது வாழ்வின் கலாச்சாரமாக மாறி வருகிறது. அந்த புது நாகரிங்கள் நமக்கு நன்மை அளித்தாலும் தீமைகளின் எண்ணிக்கையோ சற்று அளவில் அதிகமாகவே உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதுவே நமது உடல் நலத்திற்கே கேடு விளைவிக்கக்கூடிய தீமை என்றால் கொஞ்சம் யோசிக்க தான் சொல்கிறது. அம்மி போய் மிக்ஸி, உரல் போய் கிரைண்டர், மண்பானை போய் சில்வர் பானை என நீண்டு கொண்டே போகும் இந்த பழைய நடைமுறைகளை உடைத்து எறிந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பது தான் இந்த டைனிங் டேபிள். தற்போது நாகரிகம் என்ற பெயரில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை டைனிங் டேபிளில் உட்கார வைத்து உணவு பரிமாறுவதை சௌகரியமாகவும் குறிப்பாக பெருமையாகவும் கொண்டுள்ளனர். மேல்தட்டு மக்கள் தான் பணம் பார்த்த மவுசு என்றால் தற்போது நடுத்தர மக்களும் கூட இந்த டைனிங் டேபிள் முறைக்கு மாறி வருவது தான் கவலைக்குரிய விஷயம்.

முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து உணவு உபசரிப்பு நடக்கும். இது வாழை இலையின் மருத்துவ குணத்திற்கு மட்டும் தானா இல்லை அதையும் தாண்டி சம்மணமிட்டு சாப்பிடுவதின் நோக்கத்தையும் நமக்கு ஊட்டி சென்றுள்ளனர். அதாவது டைனிங் டேபிளில் சாப்பிடும் போது கால்கள் தொங்கியவாறு இருக்கும். அப்போது ரத்தம் ஓட்டம் வயிற்றுப் பகுதிக்கு செல்வதால் காலுக்கே அதிகமாக செல்கிறது. இதனால் சாப்பிட்ட உணவுகள் ஜீரணம் ஆகுவதற்கு தாமதமாகிறது. வயிற்று கோளாறுகள் ஏற்படும். ஆனால் காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால்  உணவுகள் ஜீரணமாகும் செயல் துரிதமாக நடக்கும். ஏனென்றால் ரத்த ஓட்டம் கீழே செல்லாமல் முழுவதும் வயிற்றுப்பகுதிக்கே சென்று ஜீரணம் நன்றாக நடக்க வழிவகுக்கிறது. எனவே சம்மணமிட்டு சாப்பிடுங்கள்... சகல நலத்தை பெற்று இன்புற வாழுங்கள்...

Tags :
× RELATED மது விற்றவர் கைது