×

வரலாற்று ஆய்வாளர் மறைவு அழகப்பா பல்கலையில் அஞ்சலி

காரைக்குடி, ஏப்.25: பிரபல வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா மறைவுக்கு அழகப்பா பல்கலைக்கழக வரலாற்று துறையில் துணைவேந்தர் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னை மாநகரின் வரலாற்றை காலமுறைப்படி தொகுத்தவர் எஸ்.முத்தையா. இவர் கடந்த 20ம் தேதி இயற்கை எய்தினார். இவருக்கு அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுதுறை சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தலைமைவகித்து பேசுகையில், வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா கடந்த 1981ல் மெட்ராஸ் டிஸ்கவர் என்ற புத்தகத்தை வெளியிட்டார். சென்னையின் வரலாற்றை கி.பி 1638 முதல் 1947 வரை உள்ள ஆங்கிலேய ஆட்சியை பற்றிய தகவல்களை சேகரித்து புத்தகமாக வெளியிட்டவர்.

இவருக்கு இங்கிலாந்து அரசு மிக உயரிய விருதான மோஸ்ட் எக்சலன்ட் ஆடர் ஆப் பிரிட்டிஷ் எம்பயர் என்ற மிக உயரிய விருது வழங்கியது. இவரது மறைவு வரலாற்று துறைக்கும், பத்திரிகை துறைக்கும் பேரிழப்பாகும் என்றார். மறைந்த முத்தையா படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. கலைப்புல முதன்மையர் முருகன், வரலாற்றுத் துறைத்தலைவர் சரவணகுமார், உதவி பேராசிரியர் பரந்தாமன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags : tribute ,researcher ,university ,
× RELATED ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கைக்கான ஒப்பந்தம் புதுப்பிப்பு