சேடபட்டி அருகே குடிநீர்கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்

பேரையூர், ஏப். 25: சேடபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது அத்திபட்டி. இந்த ஊரிலுள்ள 1, 2, 3, வது வார்டுகளைச் சேர்ந்த பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குடிநீர் வழங்கப்பட்டு வந்த குழாய் தற்போது அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியிலுள்ள பெண்கள் நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. மேலும் அடுத்தப்பகுதிகளில் குடிநீர் எடுக்க சென்றால், எங்களுக்கே பற்றாக்குறையாக உள்ளது, இதில் நீங்கள் வந்து தண்ணீர் பிடித்தால், நாங்கள் குடிக்கத்தண்ணீருக்கு எங்கே போவது என தண்ணீர் பிடிக்க விடமாட்டேங்குறார்கள் என இப்பகுதி பெண்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் பிரசித்தி பெற்ற அத்திபட்டி புதுமாரியம்மன் கோயில் திருவிழா ஏப்:28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதனால் இந்த குடிநீர் பிரச்னையால் திருவிழா காலங்களில் குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி விடுவோம் என நேற்று பெண்கள் காலிக்குடங்களுடன் மங்கல்ரேவு - எழுமலை சாலை அத்திபட்டி பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன்  சேடபட்டி ஊராட்சி ஒன்றிய துணை வட்டாரவளர்ச்சி அலுவலர் பாண்டியராஜன் மற்றும் சாப்டூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடனடியாக குடிநீர் கிடைக்கவும், திருவிழா காலங்களில் குடிநீர் பிரச்னையில்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது. கல்வீச்சில் 4 போலீசார் காயம்

Related Stories: