கன்னிவாடியில் காவிரி குழாய் பராமரிப்பில் அலட்சியம் வீணாகும் தண்ணீரை கண்டு வேதனை

செம்பட்டி, ஏப். 25: ரெட்டியார்சத்திரத்தில் இருந்து கன்னிவாடி, செம்பட்டி வழியே காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் வினியோகம் துவங்கியது முதலே, பல இடங்களில் உடைப்புகளில் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. ஆனால் இவற்றை சீரமைப்பதில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சக்திவேல் கூறுகையில், ‘இத்தடத்தில் பணி துவங்கி 2 ஆண்டுகளாகியும் முழுமையாக முடிக்கவில்லை. பல இடங்களில் இடைவெளிவிட்டு பணி தாமதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரோட்டில் இருந்து மிகக்குறைந்த தூரத்தில், குழாய் பதித்துள்ளனர். சில இடங்களில், சரிவர மூடப்படாமல் மண் மேவியுள்ளனர். வாகனங்களின் சக்கரங்கள் இவற்றில் சிக்கி, விபத்துக்குள்ளாவது தொடர்கிறது.

Advertising
Advertising

ஆலத்தூரான்பட்டி, கன்னிவாடி, காரமடை, ராமநாதபுரம், கோழிப்பண்ணை பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டு அதிக தண்ணீர் வீணாகிறது. பல இடங்களில் குடிநீருக்காக மக்கள் தவித்து வரும் நிலையில் தண்ணீர் விணாகி வருவது வேதனையளிக்கிறது. அதிகாரிகள் மெத்தன போக்கை கைவிட்டு குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: