இந்தநாள் எது பள்ளம்.. எது ரோடு... பழநியில் வெளிமாநில சிறுவன் மாயம்: 3 நாளாகியும் கண்டுபிடிக்காததால் பெற்றோர் கதறல்

பழநி, ஏப். 25: பழநியில் சாலையோரத்தில் படுத்திருந்த சிறுவன் மாயமாகி 3 நாட்களாகியும் கண்டுபிடிக்கப்படாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் வியாபாரம் செய்வதற்காக வெளிமாநிலத்தவர்கள் ஏராளமானோர் சாலையோரங்களில் குடில் அமைத்து குடும்பத்துடன் தங்கி உள்ளனர். இதுபோல் ஈரானிய இனத்தை சேர்ந்த சிலர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் டெண்ட்கள் அமைத்து தங்கி வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களில் ஷாநாவஸ் என்பவர் தனது மனைவி சித்தாரா, 2 மகள்கள், 5 மகன்களுடன் தங்கி உள்ளார். கடந்த 21ம் தேதி இரவு அனைவரும் குடிசையில் படுத்து தூங்கி உள்ளனர். காலையில் பார்த்த போது சபீர்ஆலி (5) என்ற மகனை காணவில்லை.

Advertising
Advertising

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக ஷாநவாஸ் பழநி டவுன் போலீசில் புகார் செய்தார். 3 நாட்கள் ஆகியும் இதுவரை சிறுவன் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, இதுதொடர்பாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. இதனடிப்படையில் நேற்று போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். 3 நாட்களாக மாயமான சிறுவன் கண்டுபிடிக்கப்படாததால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

Related Stories: