வத்தலக்குண்டுவில் ஆஸ்டின் ஜீப்புடன் வலம் வந்த ஆங்கிலேயர்

வத்தலக்குண்டு, ஏப். 25: வத்தலக்குண்டுவில் ஆஸ்டின் ஜீப்புடன் வலம் வந்த இங்கிலாந்து நாட்டவரை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். கொடைக்கானலை சேர்ந்தவர் ஜெங்கின்ஸ் (80). இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் கொடைக்கானலில் தங்கி விவசாயம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தோட்டத்து மோட்டாரை ரிப்பேர் செய்வதற்காக 1934ம் ஆண்டு மாடல் ஜீப்பில் வத்தலக்குண்டு வந்திருந்தார். வினோதமாக இருந்த இந்த ஜீப்பை ஏராளமானோர் கூட்டம், கூட்டமாக நின்று பார்த்தனர். சிலர் ஜீப் முன்பு நின்றபடி தங்களது மொபைலில் செல்பியும் எடுத்து கொண்டனர். இங்கிலாந்தின் ஆஸ்டின் கம்பெனியை சேர்ந்த இந்த ஜீப் 80 கிமீ வேகத்தில் செல்கிறது என்றும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 15 கிமீ மைலேஜ் சென்றாலும் கொடைக்கானல் மலையில் பயணிக்க இந்த ஜீப் ஏதுவாக உள்ளது என்றார் ஜெங்கின்ஸ். மேலும் அவர் கூறுகையில், ‘எனது தந்தை வாங்கி கொடுத்த ஜீப் இது. இதை நான் பொக்கிஷமாக கருதி பாதுகாத்து வருகிறேன். ஜீப்பில் பழுது ஏற்பட்டால் நானே வேலை பார்த்து விடுவேன். நான் இருக்கும் வரை உபயோகப்படுத்துவேன். அதன்பிறகு வாரிசுகளுக்கு பரிசாக அளிப்பேன்’ என்றார்.

Advertising
Advertising

Related Stories: