×

வரத்து குறைவால் பூசணி காய் விலை உயர்ந்தது

ஒட்டன்சத்திரம், ஏப். 25: வரத்து குறைவால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பூசணி காய் விலை உயர்ந்து விற்பனையாகிறது. ஒட்டன்சத்திரம்  அருகே தங்கச்சியம்மாபட்டி, விருப்பாட்சி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம்,  இடையகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பூசணி விவசாயம் அதிகளவில் நடக்கிறது. தற்போது  நிலவி வரும் கடும் வறட்சியால் பூசணி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால்  ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் பூசணி வரத்து குறைந்து விலை  அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ஒரு கிலோ  பூசணி ரூ.5க்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது  வரத்து குறைவால் ஒரு கிலோ பூசணி ரூ.16 முதல் ரூ.20 வரை கொள்முதல்  செய்யப்படுகிறது. பூசணி விவசாயிகள் கூறுகையில், ‘கடும் வறட்சியால்  பூசணி வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. வைகாசியில் முகூர்த்தங்கள்  அதிகம் இருப்பதால் பூசணி தேவை அதிகரிக்கும். அப்போது விலை இன்னும்  அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்றனர்.

குடிநீர் தட்டுப்பாடு சிறிது குறையும்
பெரும்பாறை மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருவதால் புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இந்த நீர் ஆத்தூர் காமராசர் நீர்வீழ்ச்சிக்கு சென்றடைவதன் மூலம் திண்டுக்கல் மக்களுக்கு இந்தாண்டு கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு சிறிது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...