திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் பருத்தி ஏலம்

ஒட்டன்சத்திரம், ஏப். 25: ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. கண்காணிப்பாளர் ஜோசப் அருளானந்தம் தலைமை வகித்தார். ஏலத்திற்கு அய்யலூர், எஸ்.பாறைப்பட்டி, கேதையுறும்பு, கப்பல்பட்டி, தும்மலப்பட்டி, கள்ளிமந்தையம், பூசாரிபட்டி, பூலாம்பட்டி, சிந்தலப்பட்டி, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து 27 விவசாயிகளும், தாராபுரம், பழனி, திண்டுக்கல், உடுமலை, ஆகிய பகுதிகளில் இருந்து 8 வியாபாரிகளும் கலந்து கொண்டனர். மொத்தம் 513 மூடை பருத்தி விற்பனைக்கு வந்தது. ஏலத்தொகை அதிகபட்சமாக ரூ.6410க்கும், குறைந்தபட்சமாக ரூ.5049க்கும் போனது. இதில் மேற்பார்வையாளர்கள் பொன்ராம், கீதா கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: