உறுதிமொழியை மீறினால் அவமதிப்பு நடவடிக்ைக என ஐகோர்ட் கிளை எச்சரிக்கை சின்னாளபட்டி சித்திரை திருவிழா நிறைவு பூப்பல்லக்கில் ராமஅழகர் பிருந்தாவனம் சென்றடைந்தார்

செம்பட்டி, ஏப். 25:  சின்னாளபட்டி சித்திரை திருவிழா நிறைவுநாளையொட்டி பூப்பல்லக்கில் எழுந்தருளி ராமஅழகர் பிருந்தாவனதோப்பு சென்றடைந்தார் சின்னாளபட்டியில் கடந்த 92 ஆண்டுகளாக ஸ்ரீராம அழகர் தேவஸ்தான கமிட்டியார்கள் சித்திரை திருவிழாவை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டு 93வது சித்திரை திருவிழா சித்திரா பவுர்ணமியன்று (ஏப்.19) ராமஅழகர் வெள்ளியங்கிரி நதியில் இறங்கும் விழாவுடன் திருவிழா துவங்கியது. தினசரி சுவாமி நகர்வலம் நடைபெற்றது. நேற்று முன்தினம் கோட்டைமந்தை மைதானத்தில் உள்ள தசாவதார மண்டகப்படியில் சுவாமி தங்கி 10 அவதாரங்களை எடுத்தார். பின்னர் காமயசுவாமி கோயிலுக்கு சுவாமியை கொண்டு சென்றனர். அங்கு ராமஅழகரை கள்ளழகராக அலங்கரித்து பூப்பல்லாக்கில் அமர வைத்தனர். அதன்பின்னர் சுவாமிக்கு கோயில் சார்பில் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றது. நேற்று காலை காமயசுவாமி கமிட்டியார்கள் பூப்பல்லாக்கை கோவிந்தா,

கோவிந்தா என்ற கோஷத்துடன் தூக்கி கொண்டு ஊஞ்சல் போல் முன்னும் பின்னும் ஆட்டிக்கொண்டு கோயிலை விட்டு புறப்பட்டு அரசமரம் வந்தனர்.  அங்கு தயாராக காத்திருந்த தேவர் சமுதாய மக்கள் பூப்பல்லாக்கை பெற்று கொண்டு சுவாமியை பிருந்தாவன தோப்பிற்கு அழைத்து சென்றனர். ஏற்பாடுகளை காமயசுவாமி கோயில் கமிட்டியர்கள் செய்திருந்தனர்.  பூப்பல்லக்கில் பிருந்தாவனம் தோப்பிற்கு செல்லும்போது வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் காசு, பணம், வாழைப்பழம், மாதுளம்பழம், மாம்பழம் ஆகியவற்றை சாமியின் மீது போட்டு வழிபாடு செய்தனர். ஒருசிலர் சுவாமிக்கு தீபாராதனை காண்பித்து திருஷ்டி கழித்தனர். சித்திரை திருவிழா நிறைவு நாளையொட்டி தசாவதார கொட்டகைக்கு வந்த திமுக மாநில துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமிக்கு ராமஅழகர் தேவஸ்தான கமிட்டியார்கள் மேளதாளம் முழங்க பரிவட்டம் கட்டி உற்சாக வரவேற்பளித்தனர். உடன் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், முன்னாள் நகர செயலாளர் அறிவழகன் உள்ளிட்டோர் இருந்தனர்.

Related Stories: